×

தேர்தல் ஆணையத்தை நம்பமுடியல..திடீரென 5.75% வாக்குகள் அதிகரித்தது எப்படி?.. மம்தா கேள்வி


பராக்கா: மக்களவை முதற்கட்ட தேர்தல் ஏப்.19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் ஏப்.26ம் தேதியும் நடைபெற்றது. ஆனால் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. நேற்றுமுன்தினம் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பிறகு தேர்தல் ஆணையம் இறுதி வாக்குப்பதிவு சதவீத விவரத்தை வெளியிட்டது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 66.14 சதவீதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 66.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிவில் திடீரென 5.75 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்து காட்டியிருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்ேபாது,’ மக்களவைத் தேர்தலின் முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளின் இறுதிப் புள்ளி விவரத்தை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியது.

அந்த இரண்டு கட்டங்களில் வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் முன்பு வெளியிட்டதை விட தற்போது திடீரென 5.75 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. நீண்ட காலமாக பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காணாமல் போனதால் அதை வைத்துக்கொண்டு பாஜ தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கலாம் என்ற அச்சம் உள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் திடீரென அதிகரிப்பது பிரச்னை மட்டுமல்ல, இவிஎம்களின் நம்பகத்தன்மை குறித்த தீவிர அச்சத்தையும் எழுப்புகிறது. தேர்தலில் வெற்றி பெற பாஜ எந்த நிலைக்கும் செல்லும் என்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிப்பவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் பகிரங்கப்படுத்த வேண்டும்’ என்றார்.

The post தேர்தல் ஆணையத்தை நம்பமுடியல..திடீரென 5.75% வாக்குகள் அதிகரித்தது எப்படி?.. மம்தா கேள்வி appeared first on Dinakaran.

Tags : Election commission ,Baraka ,Lok Sabha elections ,Mamata ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர் புகார்